« Home | T K Govinda Rao, Nada Inbam » | R Vedavalli, Nada Inbam » | Mohan Santanam, Mudhra » | Priya Sisters, Music Club IIT Madras » | Vijay Siva, Music Club IIT Madras » | Ravikiran, Music Club IIT Madras » | Sanjay, Music Club IIT Madras » | Kalpakam Swaminathan, Nada Inbam » | Kalpakam Swaminathan, Anna Nagar Music Circle. » | T M Krishna, Chettinad Fine Arts »

Tuesday, September 05, 2006

எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார்

இது பழந்தமிழ் நாட்டில் வாழையடி வாழையாக வழங்கப்பட்டு வரும் ஒரு சொற்றொடர். மேம்போக்கில் ஒரு பொருள் தரும் இந்த வாக்கியம், தமிழ் மொழியிலுள்ள மற்ற வாக்கியங்களைப் போல குறிப்பால் வேறு பல பொருள் உணர்த்துவதில் ஐயம் இருக்க வேண்டியதில்லை. (இலக்கணம் நன்றாக அறிந்தவரிடம் இதன் இலக்கண குறிப்பை அறிய வேண்டும்)

இந்த வலைதளத்தில் இது வரக்காரணம் யாதெனில், அவர், இவர், சுவர் என்று அனைவரும் அவரவர் தாய் மொழியிலும், வேறு பல மொழிகளிலும் பிளாக் எழுதும்போது நானும் எழுதினால் என்ன என்று பல நாட்களாய் என் மனதில் இருந்த ஓர் எண்ணத்தை இன்று செயல்படுத்தியுள்ளேன். இது காறும் ஏன் இந்த சிந்தனை செயலில் காட்டப்படவில்லை என்பது நானும் விடை அறியாத ஒரு வினாவாகிறது. இந்த வலைதளத்தில் தமிழிலும் இனி எழுதுவதென்று நான் எடுத்துள்ள இந்த விபரீத முடிவில் ஒரு சுயநலமும் உண்டு. இன்று நமது வாழ்க்கை முறைமையில் எல்லா இடத்திலும் ஆங்கிலமே புழக்கத்தில் உள்ளது. இப்படி எங்குமே தமிழ் உபயோகிக்காமலிருப்பதால் சில நாளில் தாய் மொழியாம் செந்தமிழில் எழுதுவதிருக்க வேண்டுமே என்ற பேராசை தான் அது.

சங்கீதம் சம்மந்தப்பட்ட இந்த ப்ளாக்கில் இப்படி இங்கீதமில்லாமல் சொந்த கதை கூறுகிறேனே என்று வருந்துவோரே, இன்னும் படியுங்கள்.

எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்ற சொற்றொடர இரண்டு நேர் பொருள் படுகிறது. முதலாவது கச்சேரியில் பாடவோ அல்லது ஏதாவது ஒரு வாத்தியத்தை இசைக்கவோ செல்வது. இரண்டாவது கச்சேரி கேட்க செல்வது. இதில் அடியேன் இது வரை இரண்டாவது ரகம். நம்மால் முதல் ரகத்தை எட்டி பிடிக்கமுடியாது என்று எண்ணம் கொண்டவன். கச்சேரி என்பது சங்கீதக் கச்சேரி என்ற மட்டும் வைத்துக்கொள்வோம். மற்ற பொருட்களை விட்டுவிடுவோம். இது போல கச்சேரிகளுக்கு சென்று ஏதோ தப்பும் தவறுமாகவும், சில உண்மைகளையும் தான் இந்த ப்ளாக்கில் எழுதிவருகிறேன்.

ஸங்கீதம் என்ற ஆழ்கடலில் நானும் தத்தளிப்பதும், எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்பது போல தான் உள்ளது. முதலில் தெரிந்தவரை எழுதி வந்தேன். பின்னர் தெரியாதவற்றை கண்டுபிடித்து எழுதத்தொடங்கினேன். அது போதாதென்று சொந்த விருப்பு வெறுப்புகளையும் புகுத்தி எழுதிவந்தேன். சில நாட்களுக்கு முன்பிலிருந்து, இங்கு எழுதும் கச்சேரிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடைக்கப்பெரின் அவற்றையும் சேர்த்து உள்ளேன். இப்படி, அவ்வப்போது புதிதாக எதேனும் செய்து கொண்டிருப்பதில் அடுத்த முயற்சி தான் இந்த தமிழில் எழுதும் ஆசை.

நேரம் கிடைக்கும்போது தமிழிலும் எழுதலாமேன்று உத்தேசித்துள்ளேன். ஆங்கிலத்தில் எழுதுவதை கைவிடாது தமிழையும் சேர்த்து கொள்ள ஆசை. இது எது வரை நடக்கும். இன்னும் எத்தனை வரிகள் எழுதுவேன் என்பது தெரியவில்லை. பார்க்கலாம்.

For those, who cannot follow this post, i have just given elaborate buildup to announce that i wish to write in Tamil also, on my blog.

3 Comments:

Blogger ommachi said...

பரத்: நன்றாக இருக்கிறது. மேலும் சில தொடுப்புகளுக்குப் பிறகு உன் style எதுவென்று புரியும் (உனக்கும் எனக்கும்!). அதுவரை அதைப்பற்றி விமரிசித்துப் பயனில்லை.

சொன்ன விஷயத்தில் ஒரு கேள்வி:இந்த கச்சேரிக்குப் போவது சங்கீதக் கச்சேரியை குறிக்கிறதா இல்லை கோர்ட் கச்சேரியை குறிக்கிறதா? கோர்ட் கச்சேரியை வைத்துத்தான் இந்த கிண்டல்மொழி வந்ததாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன்...

அரூண்

3:21 PM  
Blogger bharath said...

அருண்,

நீங்கள் கூறுவது போல், இந்த சொற்றொடர் கோர்ட்டுக்கு செல்வதாக கூறிக்கொள்ளும் வக்கீல்களுக்கும் உபயோகப் படுத்தப்பட்டது தான். இப்போது நீங்கள் கூறுவதிலிருந்து தான், அங்கிருந்து தான் நம் ஸங்கீத மாஃபியாவிற்கு அது வந்ததென்று தோன்றுகிறது. காலப்போக்கில் எத்தொழிலாயினும், இந்த வாக்கியத்தை பயன் படுத்துகிறார்கள்.

மேலும், எனக்கென்று ஒரு பாணி இருப்பதாக தெரியவில்லை. நாளடைவில் அவ்வாறொன்று வருமா என்பது எனக்கு சொல்லத் தெரியவில்லை.

பாரத்வாஜ்

3:33 PM  
Blogger Ramkumar R. Aiyengar said...

மற்ற கச்சேரியை விட்டு விடு என்றால் அதிலும் ஈடுபாடு உண்டோ? :p

6:17 PM  

Post a Comment

<< Home