« Home | Two Concerts » | K G Vijayakrishnan, Veena CD release and Concert. » | Rama Ravi, Carnatica » | Carnatic Music - Is it only religious? » | Manakkal Rangarajan, Carnatica » | Sugandha Kalamegam, Music Academy » | Kalpakam Swaminathan, Nada Inbam » | Kalpakam Swaminathan, Samajam » | Blograph » | A Sadasivam, Dikshitar Day, Music Club IIT Madras »

Tuesday, December 12, 2006

சகிக்காத சஹானாவும் சுமாரான த்விஜாவந்தியும்

இன்று மாலை 4:30 மணிக்கு ஒரு கச்சேரிக்கு செல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் கிளம்ப முடியவில்லை. என்னுடன் அனேக கச்சேரிகளுக்கு வரும் நன்பரை தொடர்பு கொண்டு, கச்சேரிக்கு செல்லலாமென்று முடிவு செய்து செய்தித்தாளை புரட்டி, மூன்று கச்சேரிகளை தேர்ந்தெடுத்தோம். மணி 5:45 pm. மற்றுமொரு நன்பரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார். இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு செல்வதென்று தீர்மானம்.

அதன்படி, முதலாவதாக வசுந்தரா ராஜகோபால் அவர்களின் கச்சேரி. ராகசுதா அரங்கில், ஆறாம்திணை இணையதளத்தின் சார்பில் நடைபெற்ற இக்கச்சேரிக்கு செல்ல காரணம், செல்லும் வழியில் உள்ள முதல் அரங்கம், மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றில், முதலில் ஆரம்பிக்கும் கச்சேரி இது தான். அடையார், ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம், என்று வாகன நெரிசலை கடந்து, நாங்கள் அரங்கத்துள் நுழைய அம்மணி ஏதோ ஒரு ராகத்தில் மேல் கால ஸ்வரங்களை பாடிக்கொண்டிருந்தார். இது சாவேரியா அல்லது சாருகேசியா அல்லது நாட்டையா? எது அபஸ்வரம்? என்று நினைக்கையில் 'ஜய ஜய பத்மநாபா' என்று பல்லவி வரி வந்தது. தொடர்ந்து ரயிலை பிடிக்கும் வேகத்தில் சிவனின் 'சித்தம் இறங்காததேனய்யா' கீர்த்தனம். செந்தில் வேலன் கேட்டிருந்தால், தான் முதலில் ரயில் ஏற, எழும்பூர் சென்று இருப்பார். அதற்க்கேற்றார் போல் மிருதங்கம் வாசித்தவரும், உடுக்கை வித்வான் போல் வாசித்தார். கடம் வித்வான், நானும் இருக்கிறேன் என்று அவ்வப்போது காட்டிக்கொண்டார். கீர்த்தனத்தில் என்ன பொருள் வருகிறதென்று அறிந்து அதற்க்கேற்றார் போல் ஒரு உணர்ச்சியும், சரியான நடையில் பாட வேண்டுமென்று இன்றைய சில வித்வான்களுக்கு தெரிவதில்லை. கேட்பவர்கள் செய்த பாவம் தான்.

அடுத்து, ஒரு ஆலாபனை. முதல் சஞ்சாரம் வாசஸ்பதி போல இருப்பினும், தொடர்ந்து அனைத்தும் ஹேமவதி, ஸிம்மேந்திர மத்தியமம், கல்யாணி, ராமப்ரியா என பல பெயர் தெரிந்த, தெரியாத ப்ரதி மத்தியம ராகங்களில் இருந்து கடன் வாங்கி இணைக்கப் பெற்ற ஒரு ராகமாலிகா. பிடில் வாசித்த உஷா ராஜகோபலனும் சற்றும், சோடை போகாமல், அதே ராகமாலிகையை வாசிக்க, பட்ணம் சுப்ரமணிய ஐயர் தான் நம்மை காப்பாற்ற வந்தார். அவரது 'என்னடு நீ க்ருபா' என்ற வாசஸ்பதி ராக க்ருதி, ஆரம்பிக்க, நாங்களும், அங்கிருந்து எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் வானொலியில், மணக்கால் ரங்கராஜன் இதே கீர்த்தனத்தை எவ்வளவு நேர்த்தியாக பாடினார் ஏன்று நினைவுக்கு வந்தது.

லஸ் கார்னரை கடந்து, பஜார் ரோடு வழியாக, சமாஜத்தை அடைய, 'Today's Concert Cancelled' என்று பலகை. நாங்கள் வருகிறோம் என்று முன்னரே அறிந்து கொண்டு தான் பாட இருந்த அம்மணி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டாரோ?

அட்டவணையில் இருந்த மூன்றாவது கச்சேரி, ஒரு இளம் விதுஷியில் பிடில் கச்சேரி. மைலாப்பூரின் சந்துகளை கடந்து, ராமக்ருஷ்ணா மடத்திற்க்கு எதிரே உள்ள P S பள்ளியை அடைந்தோம். Music Connoisseur's Club ஏற்பாடு செய்திருந்த கச்சேரி. ஆதிரா க்ருஷ்ணன் என்ற பெயர், ஆதிரை என்ற செந்தமிழ் பெயரையும், அந்நாளில், பள்ளியில் படித்த, மணிமேகலையையும், காயசண்டிகையையும், நினைவு படுத்தியது. முதலில், 'விரிபோணி' வர்ணம் மூன்று காலங்களில். தொடர்ந்து, த்விஜாவந்தி ஆலாபனை. ஆங்காங்கே ராகம் தெரிந்தாலும், ஒன்றோடு ஒன்று ஒட்டாத சஞ்சாரங்கள். ஏதோ போனால் போகட்டும் என்று விட்டுவிடுவோம். தீக்ஷிதரின் 'அகிலாண்டேஸ்வரீம்' கீர்த்தனத்தை சுமாராக வாசித்தார். தொடர்ந்து, பஹுதாரி ஆலாபனை. ஆங்காங்கே 'ப த நி ப ம க ம' மற்றும் 'ஸ க ம க ஸ' வந்தன. மற்றபடி மேலும் கீழும் ஏறி இறங்கினார். த்யாகராஜரின் 'ப்ரோவபாரமா' கீர்த்தனம்.

மிருதங்கம் வாசித்த J வைத்தியநாதனும், கடம் வாசித்த குருப்ரசாதும், மாறி மாறி தாளம் போட்டும், முன் வரிசையில் அமர்ந்து பிடில் வாசித்தவரின் தந்தை தாளம் போட்டும், வாசித்தவருக்கு தாளம் தப்ப தான் செய்தது. ஒன்றரை இடங்கள் தள்ளி எடுக்கும் இந்த கீர்த்தனத்தை எனோ இவர் மட்டும் ஒரு முறை கூட சரியாக எடுக்கவில்லை. ஸ்வரங்களும் சுமார் தான்.

அதற்க்கு மேல் பொருக்க முடியாமல், செவிக்கு உணவு கிடைக்காத நிலையில், வள்ளுவர் சொற்படி, வழியில் போண்டா சாப்பிட்டு விட்டு திரும்பினோம்.

Labels: ,

2 Comments:

Anonymous Anonymous said...

Commenting about VasundarA RajagOpal, who is a disciple of TRS, this bad is objectionable. It shows your poor knowledge in music. She is one of the most favourite artists of SVK.

10:04 AM  
Blogger bharath said...

thanks for telling me what i know. i hope to learn ragam fundaes from you, sometime.

3:14 PM  

Post a Comment

<< Home