« Home | எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார் » | T K Govinda Rao, Nada Inbam » | R Vedavalli, Nada Inbam » | Mohan Santanam, Mudhra » | Priya Sisters, Music Club IIT Madras » | Vijay Siva, Music Club IIT Madras » | Ravikiran, Music Club IIT Madras » | Sanjay, Music Club IIT Madras » | Kalpakam Swaminathan, Nada Inbam » | Kalpakam Swaminathan, Anna Nagar Music Circle. »

Monday, September 11, 2006

பிடில் வித்வான் பாட்டு பாடினால்...

சாதாரணமாக கச்சேரிகளில் பிடில் வித்வான் ஒருவரின் பாட்டுக் கச்சேரியைக் கேட்டுகும் பாக்கியம் பெற்றேன்.

இன்று மாலை, ஒரு தெரிந்தவரின் வீட்டின் கூடத்தில், ஒரு பிரபல பிடில் வித்வான் வாய்ப்பாட்டு கச்சேரி செய்தார். மொத்தம் 25 பேர் இருந்திருப்பார்கள். மைக், அம்ப்ளிஃபையர் என்று எந்த வித இடைஞ்சல்களும் இல்லாத ஒரு கச்சேரி. ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் கூற விடலாம், சேம்பர் ம்யூசிக். அவருக்கு பக்கவாத்தியமாக பாட்டு, பிடில் இரண்டிலும் கச்சேரி செய்யும் ஒரு இளம் விதுஷி பிடில் வாசித்தார். மிருதங்கம் வாசித்தவர் மிருதங்க வித்வான் தான். ஆனால், அவர் எப்போதுமே இடம் மாறி தான் அமருவார். இடது கையால் மிருதங்கம் வாசிப்பவர்.

நன்பர் ஒருவர் சமீபத்தில் தனது பதிவுகளில் தற்கால கச்சேரிகளையும் வித்வான்களையும் பற்றி சற்றே குறைபட்டுக் கொண்டு ஒரு பதிவை எழுதினார்.
http://www.arunn.net/tamilblog/2006/09/06/vazka-kalaingkarkal/#more-30

இதை படித்துவிட்டு தான் இன்று பாடினாரோ அந்த பிடில் வித்வான் என்று எண்ணத் தோன்றுகிறது. பாடியவர் திரு R K ஸ்ரீராம் குமார், அவருக்கு பிடில் வாசித்தவர் அம்ரிதா முரளி, மிருதங்கததில் அருண்ப்ரகாஷ்.

எப்பவும் மோஹனத்திலோ கல்யாணியிலோ வர்ணம் பாடி கேட்ட பழகிப் போன காதுகளுக்கு, ஷ்யாமா சாஸ்திரிகளின் பேகட வர்ணம் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து, எழுந்து உட்காரச் செய்தது. மேல் கால ஸ்வரங்கள் நன்றாகப் பாடினார். மனோஹரி ராகத்தில் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் 'சங்கரம் அபிராமி மனோஹர்ம்' க்ருதியும் அதில் ஸ்வரங்களும் தொடர, அடுத்து வந்த 'பருலனு வேடனு' என்ற த்யாகராஜரின் பலஹம்ஸ க்ருதியுடன் கச்சேரி களை கட்டியது என்று சொல்லியே ஆக வேண்டும்.

ஸ்ரி ராகத்தில் ஆலாபனையை அடுத்து தொடங்க, அடியேனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. யாரும் பாட மாட்டார்களா என்று காலையில் புலம்ப, மாலையில் அதே ராகத்தை விஸ்தாரமாக கேட்கும் பாக்கியம் எத்துனை பேருக்கு கிட்டும். நான் அதிர்ஷ்டசாலி தான். ஆலாபனை மிகவும் நேர்த்தி. அது மட்டுமா, தீக்ஷிதரின் 'த்யாகராஜ மஹா த்வஜாரோஹண' க்ருதியை பாடி, வித்வான் நமக்கெல்லாம் அமர்ந்த இடத்திலிருந்து திருவாரூர் த்யாகேசரின் உத்சவம் முழுவதையும் தரிசனம் செய்து வைத்துவிட்டார். ஜகன்மோகினி ராகத்தில் 'மாமவ ஸததம்' என்று க்ருதி தொடர நமது எதிர் பார்ப்புகள் கூடியது.

அடுத்த ஆலாபனை, தன்யாசி. அபாரமான ஆலாபனையை தொடர்ந்து சுப்பராய சாஸ்த்ரியின் 'தலசின வாரு' க்ருதியை ஆரம்பிக்க இது தான் கச்சேரியின் ப்ராதான்யமான உருப்படி என்ற முடிவுக்கு வந்தேன். 'ஸுர ரிபு தமன குமார ஜனனி கருணாரஸாக்ஷி கௌமாரியனி ஸதா' என்ற வரியில் மூன்று காலத்திலும் நிரவல் நன்றாகத் தான் இருந்தது. ஸ்வரங்களும் தனியாவர்த்தனமும் வராத நிலையில், அடுத்து என்ன வருமோ என்று யோசிக்கத் தோன்றியது.

தேவகாந்தாரி ஆலாபனை ஆரம்பிக்க, இது தான் மெயின் என்று எண்ண, அது சட்டென்று முடிய, இன்னும் ஏதோ இருக்கிறதென்று தெரிந்தது. தேவகாந்தாரியில், த்யாகராஜரின் 'எவரு மனகு' க்ருதியை தொடர்ந்து, 'மாமவ ரகுவீர' என்ற தீக்ஷிதர் க்ருதி. இது என்ன ராகம் என்று அனைவரும் யோசிக்க, தொடர்ந்து ஸ்வரங்கள் வேறு. மாஹூரி ராகம் என்று பாடியவரே அறிவித்தபின் கொஞ்சம் சஞ்சலம் குறைந்தது.

இந்த ஒரு அமைப்பில் ஆரம்பித்த கச்சேரியின் மெயின் மட்டும் சோடை போய் விடுமா? பைரவியில் 'சரி எவ்வரம்மா' க்ருதியும் அதன் ஆலாபனையும் மிகவும் நன்றாக இருந்தது. 'மாதவ ஸோதரி கௌரி அம்ப' என்று மூன்று கால நிரவல், கீழ்காலத்தில் குறைப்பு ஸ்வரம் என்று அசத்திவிட்டார். மேல் கால ஸ்வரங்களும் கோர்வையும் இல்லாததே நன்றாகத் தான் இருந்தது.

தனியாவர்த்தனத்தை அடுத்து 'குங்குமபங்கஸமாபாம்' என்ற ஸ்லோகத்தை நீலாம்பரியில் பாடி தொடர்ந்து பாடிய 'கருணாநந்த சதுர' என்ற எட்டய்யபுரத்து ராஜாவின் உருப்படிக்கு கரகோஷங்கள் எவ்வளவு எழுப்பினாலும் போதாது. அவ்வளவு அழகான க்ருதி.

'தந்தையும் தாயும் நீ' என்று தாயுமானவரை காபியிலும், பேஹாக்கிலும், சிந்துபைரவியிலும், செஞ்சுருட்டியிலும் துதித்து 'கங்கை கொடு மலர் தூவி' என்ற உருப்படியை பாடினார். செஞ்சுருட்டியிலும் புன்னாகவராளியிலும் அமைந்த இந்த உருப்படியில் ஒரு விசேஷம். மிஸ்ர ஜம்பை கண்ட த்ரிபுட ஆகிய இரண்டு தாளங்களும் மாறி மாறி வந்தன. கண்டா ராகத்தில் அமைந்த நாராயண தீர்த்தரின் மங்களக் க்ருதி கச்சேரியுடன் கச்சேரி முடிந்தது.

பாடிய வித்வான் உருப்படிகளைத்தேடிப் பிடித்து சேர்த்து கச்சேரி செய்தார் என்று ந்ன்றாகத் தெரிந்தது. க்ருதிகள் அனைத்தும் உத்தமம். பாடிய விதம் அதி உத்தமம். அனைத்து ராகங்களிலும் அவற்றின் ஸ்வரூபத்தை முழுமையாக வெளிக்கொணர்ந்து ரசிகர்களை மகிழ்வித்தார் என்று தான் கூற வேண்டும்.

பிடில் வாசித்த அம்மணி பாடுபவருக்கு ஏற்றார்போல நன்றாக வாசித்தார். அவரது ஆலாபனைகளும், நிரவல், ஸ்வர்ங்களில், அவரது பதில்களும் நன்றாகத் தான் இருந்தது. மிருதங்கமும் கச்சேரிக்கு மிகவும் அணுசரணையாகவே அமைந்துவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் எற்றார்போல் வாசித்தார். தனியாவர்த்தனத்திலும் நம்மை தனியாக கவனித்துவிட்டார் மிருதங்க வித்வான்.

மொத்ததில் ஒரு அபாரமான கச்சேரி. இதுவரை கேட்டிராத, இனிமேல் கேட்பது சந்தேகம் தான் என்று சொல்லும் பல உருப்படிகளை ஒரே கச்சேரியில் கேட்டது ஒரு பெரிய பாக்கியம். பாடுபவரும் அவற்றை நேர்த்தியாகப் பாடி, ஆலாபனை நிரவல் ஸ்வரம் அனைத்திலும் நம்மை மயங்க வைத்து, பக்கவாத்தியங்களும் கச்சிதமாக அமைந்துவிட்டால் கேட்கவா வேண்டும், வாழ்வில் மறக்கக் கூடாத ஒரு மாலைப் பொழுது தான்.

Labels:

4 Comments:

Anonymous Anonymous said...

பரத்: நல்ல விமர்சனம். மிக நேர்த்தியான ஒரு கச்சேரிக்கு வேறு எப்படி எழுத முடியும்?

நாம் எல்லோரும் வெகு நாட்களாக ஏங்கிக்கொண்டிருந்த ஒரு கச்சேரியை கேட்டதில் பேராசைதான் மேலோங்குகிறது...

வாழ்க ஸ்ரீராம்குமார்...

2:25 AM  
Anonymous Anonymous said...

ayya - neer koduthu vaithavar. Nalla kutcheri - nalla tamizh vimarsanam - naangal thaan ketkavillai - Bravao - Sarathy

1:00 PM  
Anonymous Anonymous said...

Bharath, was this concert recorded? If so, how can I get a copy of the same? -- Krishnan

7:40 PM  
Blogger bharath said...

yes it was. however, i dont have a copy yet. will share with others once i get a copy.
bharath

12:32 PM  

Post a Comment

<< Home