« Home | Sathur Sisters, Samajam » | S Sowmya, AIR Madras Deepavali Concert » | Delhi Muthukumar, Music Club IIT Madras » | Music Tag » | P Varamurthy, Nadasvaram, Music Club IIT Madras » | R K Shriram Kumar Vocal Concert. » | பிடில் வித்வான் பாட்டு பாடினால்... » | எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார் » | T K Govinda Rao, Nada Inbam » | R Vedavalli, Nada Inbam »

Monday, October 16, 2006

நல்ல ஸங்கீதம் இங்கே. ரசிகர்கள் எங்கே?

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கச்சேரிக்குச் சென்றேன். சென்னையில் ஸங்கீதத்தின் மையமாக இருக்கும் மயிலாப்பூரில் மாதவ பெருமாளின் திருவடிவாரத்தில் உள்ள 'ஸ்ரீ த்யாகராஜ ஸங்கீத வித்வத் ஸமாஜம்' என்ற ஒரு அமைப்பின் சார்பில் சாத்தூர் சகோதரிகள் ஸ்ரீமதி லலிதா சந்தானமும் ஸ்ரீமதி புவனா ராஜகோபாலனும் பாடினார்கள். பிடில் வாசித்தவர் ஸ்ரீமதி ஸ்ரீலக்ஷ்மி வெங்கட்ரமணி. மிருதங்கம் வாசித்தவர் மதுரை சுந்தர்.

நான் ஸமாஜத்துள் நுழைந்த போது தான் பிடில் அம்மணி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே உள்ளே விரைந்தார். மொத்தம் 10 பேர் தான். சத்குரு த்யாகப்ரம்மத்தின் ஸந்நதியில் தீப ஆராதனை செய்யப்பட்டு கச்சேரி தொடங்கும் சமயம் மொத்தம் ரசிகர்கள் எண்ணிக்கை 10 தான் இருக்கும். சிறிது நேரத்தில் இன்னும் சிலர் வந்தார்கள். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் மொத்தம் 25 பேர்க்கு மேல் இல்லை. (மேடையின் மேல் இருந்தவர்கள், ஸமாஜத்தின் காரியதரிசி, ஸந்நதியின் அர்ச்சகர், மைக் செட் வைப்பவர், வாட்ச்மேன் உட்பட கணக்கில் எடுக்கப் பெற்ற பின் தான் இந்த எண்ணிக்கை.)

ஆனால் அபாரமான ஸங்கீதம். பாடிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊக்கப் படுத்தும் வகையில் பாடினர். ராக ஆலாபனைகள், கீர்த்தனைகளை பாடுதல், நிரவல், ஸ்வரம் பாடுதல் என அனைத்திலும் நன்றாகத் தான் செய்தார்கள். ஆலாபனைகளில் தேவையற்ற ப்ருகாக்கள் இல்லை. அளவான கமக்கங்கள். அநாவசிய பிடிகள் எவையும் இல்லை. அது மட்டுமா, ஸ்ருதி சுத்தம், ஸாஹித்ய சுத்தம் இரண்டும் இருந்தது. நிரவல் செய்ய தெர்ந்தெடுத்த இடங்களும், பூரண பொருள் படும்படி எடுத்து, அவற்றை லாவகமாக பதம் பிரித்து பாடிய விதம் மிகவும் நேர்த்தி. கீர்த்தனங்களும் மிகவும் நன்றாகத்தான் பாடினர்.

சாதாரணாமாக நான் கேட்க விரும்பாத பந்துவராளியும் கரஹரப்ரியாவும் தான் கச்சேரியில் ப்ராதான்யமாக பாடப் பட்ட இரு ராகங்கள். ஆனால் இவர்கள் பாடிய விதம் என்னையே பேஷ் பலே என்று சொல்ல வைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். "பாடும் ராகத்தை பிடிக்கவில்லை என்று குறை சொல்லாதே. பாடிய விதம் பிடிக்கவில்லை என்று சொல்." என்று நண்பர் ப்ரசன்னா கூறிக்கொண்டே இருப்பதன் விபரத்தை அன்று உணர்ந்தேன். உருப்படிகள் பல அவ்வளவாக கேட்கக் கிடைக்காதவை. (முழு பட்டியல் விபரம் தனியே ஆங்கில் விமர்சனத்தில் உள்ளது.)

பக்கவாத்தியங்களும் நன்றாகத்தான் அமைந்தன. ஆனாலும், இது போன்ற நல்ல ஸங்கீதத்திற்கு ரசிகர்கள் ஏன் வருவதில்லை? இதற்கு யார் விடை கூறுவது?

Labels:

0 Comments:

Post a Comment

<< Home